குஞ்சுமோனின் தத்துவம்
.................................................................................................................................................................................................................................
வாழ்க்கை குறித்து
"என்னுடைய
அக மற்றும் புற வாழ்க்கையானது மற்றவர்களின் உழைப்பைச் சார்ந்தே
அமைகிறது. இதை ஒவ்வொரு நாளும் நினைவு கூறுகிறேன். அவர்கள்
தற்போது வாழ்கின்றவர்களாகவோ, இறந்தவர்களாகவோ இருக்கலாம்.
பிறரிடமிருந்து நான் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற அனைத்தையும்
, அதே அளவில் நான் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதை
உணர்ந்து என்னை நானே நெறிப்படுத்திக் கொள்ள வேண்டும்"
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
"ஒவ்வொரு மனிதனின் பிறப்பும் ஒரு சாதாரண நிகழ்ச்சி. ஆனால் அவனது
இறப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்."
"மனிதனின் பிறப்பு பல அத்தியாயங்களை கொண்ட ஒரு புத்தகத்தின் ஒரு
பதிப்பு போன்றது. இந்த பதிப்பில் அவன் எல்லா நல்ல
காரியங்களையும் செய்து விட வேண்டும். ஏனென்றால் அடுத்த
பதிப்புகள் வெளி வராமலே போய்விடலாம்."
"ஒருவரின் மரணத்துக்கு பிறகு, அவர் சக உயிர்களின் நலனில் அக்கறை
கொண்ட மாமனிதராக வாழ்ந்தார் என அனைவராலும் புகழப்பட
வேண்டும். நாம் அனைவரும் மரணத்துக்குட்பட்டவர்கள். ஆனால்
நாம் வழங்கிய் கொடைகளுக்கு மரணமேயில்லை. நமது குழந்தைகளுக்ககாக
நாம் சம்பாதித்த நற்பெயர்தான். அது இந்த சமுதாயத்தில்
அவர்களுக்கு பெரும் மதிப்பையும், மரியாதையையும் ஈட்டித் தரும்."
"நாணயங்கள் எப்போதும் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். ஆனால்
கரன்சி நோட்டுகள் அமைதியாகவே இருக்கும். எனவே உங்களுடைய மதிப்பு
உயரும் போது அமைதியாகவும், மௌனமாகவும் இருங்கள்."
தொழில் குறித்து
செய்யும் தொழிலே தெய்வம்
தொழிலே பிரார்த்தனையாகும் போது நேர்த்தி என்பது தன்னால்
வருகிறது, உங்களை உருவாக்கிய இந்த உலகிற்கு, நேர்த்தி குறித்து
எதுவும் செய்து கொள்ளாமல் நன்றியுடனும், சந்தோஷத்துடனும்
பணியாற்றுவதும், அடைய வேண்டிய இலட்சியத்தையும், அதற்கான
வாய்ப்புகளையும் நுண்ணறிவால் கண்டரிவதுமே சிறந்த
பிரார்த்தனையாகும். |