"ஆயிரம் ஆயிரம் சியலோ கார்கள்
அணிவகுத்து நிற்கின்றன, சில வினாடிகளில் லாரி நிரம்பிய சியலோ
கார்கள் நீர் வீழ்ச்சியில் உருண்டு விழுகின்றன ."
சினிமா துறையில் இந்த காட்சி பெரும் அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியது, காண்போர் வாயடைத்து போயினர், திரையுலகமே
அதிசயித்தது. மூச்சு விடவும் மறந்து போய் ரசிகர்கள் இந்த
காட்சியை ரசித்தனர். அது ஒரு அற்புதமான திரில்லர் ஆகும். ஜேம்ஸ்
பான்ட் படங்களை போல, கே.டி.குஞ்சுமோன் தனது திரைப்படங்களை
மயிர்க்குசெறியச் செய்யும் காட்சிகளுடன் தொடங்குவது வழக்கம்.
எனவே படம் தொடங்குவதற்கு முன்பாகவே ரசிகர்கள் அரங்கத்திற்குள்
வந்து அமர்ந்து விடுவார்கள், படம் நகர நகர பார்வையாளர்களை சீட்
நுனிக்கே கொண்டு வர செய்வது அவரது தனித்தன்மையாகும்.
திரையுலகில் கே.டி.குஞ்சுமோன் ஏற்படுத்திய தாக்கம் அபாரமானது.
இந்த துறையில் இப்படி ஒரு தாக்கம் இதற்கு முன்னர்
உணரபட்டதேயில்லை என்று கூறினால் அது மிகையாகாது.
கே.டி.குஞ்சுமோன் பிற
தயாரிப்பாளர்களிடமிருந்து பெரிதும் வேறுபட்டவர். ஹாலிவுட்
தயாரிப்பாளர்களின் வரிசையைச் சேர்ந்தவர். நேர்த்தி என்றால்
அவர்தான். அவரது மெகா காட்சிகளை பற்றி கேட்கும் போது, "ஒவ்வொரு
காட்சியும் தியேட்டரை நோக்கி ரசிகர்களை ஈர்க்கும் வகையில் சுடர்
விட்டு பிரகாசிக்க வேண்டும்" என்று அவர் சர்வசாதரணமாக கூறுவது
வழக்கம்.
ரசிகர்களின் நாடி துடிப்பை நன்கு
உணர்ந்து கொண்ட ஒரு சில தயாரிப்பாளர்களில் அவரும் ஒருவர்.
பெரும் முதலீட்டுடன் பிரமிக்கத்தக்க திரைப்படங்களை அவர்
எப்போதுமே தயரித்து வந்துள்ளார். படத்தின் ஹீரோவிலிருந்து,
இயக்குனர் வரை அவர் மிகத் திறமைசாலி நபரையே தேர்வு செய்வது
வழக்கம். அதிகம் பிரபலமாகதவராக, அதே சமயம், அபார திறமை
படைத்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். பின்னர் அவர்களிடம்
இருந்து அசுர பலம் வாய்ந்த சூப்பர் டீம் ஒன்றை அவர்
உருவாக்குவர். அவர் திரைப்படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட்
படங்களாகும். எல்லாமே பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுகளாகவும், மெகா
ஹிட்டுகளாகவும் அமைந்திருக்கின்றன. இன்றைய திரையுலகில் சூப்பர்
ஸ்டார்களாக திகழும் இயக்குனர் சங்கர், நடிகர்கள் விஜய்,
சரத்குமார், நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, மாபெரும்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர்
கே.டி.குஞ்சுமோனின் திரைப்படங்கள் வாயிலாகவே பெரும்
திருப்புமுனையை சந்தித்தனர்.
அவரது அனைத்து திரைப்படங்களுமே
பழைய இலக்கணங்களை தகர்த்தெறிந்து புதிய மரபுகளை உருவாக்கின.
ரசிகர்களை பரவசபடுத்துவதில் அவருக்கிருந்த அக்கறை அவரை பிற
தயாரிப்பாளர்களிடம் பெரிதும் வேறுபடுத்தி காட்டியது. திரையுலக
வரலாறில் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் கிடைக்காத ரசிகர்
மன்றங்கள் கே.டி.குஞ்சுமொனுக்குதான் கிடைத்தன. இதுவே அவரது
அசாதாரண திறமைக்கு ஓர் அற்புதச் சான்றாகும். நம்ப முடியாத
திரைப்படங்கள் வழங்கிய ஒரு தயாரிப்பாளருக்கு கிடைத்த மரியாதை
என்றும் இதனை சொல்லலாம். பொதுவாக அவர் எப்போதுமே பிறரிடமிருந்து
வேறுபட்டிருக்க விரும்பினார்.
பள்ளிக் கல்விக்கு அப்பால்
முறையான கல்வியை அவர் பெறவில்லை. என்றாலும் வர்த்தக அறிவு
என்பது நம்ப முடியாத அளவிற்கு அபரிதமாக உள்ளது. எனினும் அவர்
திரைப்படத் துறையின் ஒரு சிறப்புமிகு மாணவராவார். ஆரம்பத்தில்
சுற்றுலா மற்றும் ஹோட்டல் துறையில் பணியாற்றிய அனுபவம்
வாடிக்கையாளர்களுடன் உறவு எப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்ற
உத்திகளை அவருக்கு நன்றாக கற்றுக் கொடுத்தது. சில சமயங்களில்
வாடிக்கையாளர்கள் எவ்வாறு கடினமாக நடந்து கொள்வார்கள்
என்பதையும் அவர் நன்கு தெரிந்து கொண்டார். ஒரு திரைப்பட
விநியோகஸ்தராக அவர் பெற்ற நீண்ட கால அனுபவம் ரசிகர்கள் எதை
விரும்புகிறார்கள் என்பதை அவருக்கு தெளிவாகக் காட்டியது.
அத்துடன் திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களையும்
அவருக்குக் கற்றுக் கொடுத்தது.
அவர் உழைப்பால் உயர்ந்தவர். "நான்
சம்பாதித்த ஒவ்வொரு காசும் என்னுடைய வியர்வையாலும்
இரத்தத்தாலும் பெற்றது " என அவர் பெருமையுடன் கூறுவது வழக்கம்.
வாழ்க்கையில்
35 ஆண்டுகள் போராடி தற்போது சிறந்த தொழில்
வல்லுனராக உருவெடுத்துள்ளார். தனது திரைப்படக் குழுவினரை
முழுமையாக நம்புபவரகவும், அவர்களுடைய கருத்துகளுக்கு செவி
சாய்ப்பவராகவும், சிறந்த கருத்துக்களை வழங்குவதன் மூலமும்,
விவாதத்தின் மூலமும் அவர்களுக்கு அகத்துண்டுதல்களை ஏற்படுத்தும்
சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் போற்றபடுகிறார். படப்பிடிப்பு
குழுவினருக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயலாற்றும் அவர்,
அவர்களுடைய வேலையில் ஒரு நாளும் குறுக்கிட்டதில்லை. அவருக்கு
வேண்டியதெல்லாம் தரமான படைப்பு மட்டுமே. புதுமை புரிய வேண்டும்
என்ற தாகம் கொண்டவர்களாகவும் உருமாறச் செய்வது அவரது தனித்
திறனாகும்.
சிந்தனையைத் தூண்டும் ஈடு
இணையற்ற அவரது தயாரிப்பு உத்திகள் குறித்து படப்பிடிப்புக்
குழுவினர் எப்போதும் வியந்து பாராட்டுவது வழக்கம். இதனால்
எராளமான கருத்துக்கள் முன்மொழியப்படுவதர்க்கான வாய்ப்புகள்
உருவாகின. நன்கு ஆராய்ந்து முடிவு எடுத்த பின், தேர்வு
செய்யப்படும் அந்த கருத்துக்கள் அவரது படங்களில் தொடக்கம் முதல்
இறுதிக் காட்சி வரை பிரதிபலிக்கப்படும். இது, பார்வையாளர்களை
பெரும் ஈடுபாட்டுடன் படத்துடன் ஒன்றி விடச் செய்யும் வகையில்
இருக்கும். லேசாக கண்களை சிமிட்டியப்படி பேசிய அவர, "
பார்வையாளர்களிடம் ஈடுபாட்டை ஏற்படுத்துவதில் நான் வெற்றி
காணும் போது, அவர்கள் தியேட்டர்களை முற்றுகையிடுகின்றனர். எனது
படங்களை தியேட்டரில் பார்ப்பதையே அவர்கள் விரும்புகின்றனர்.
கொடுக்கும் பணத்துக்கு சரியான முறையில் நான் ரசிகர்களை திருப்தி
செய்கிறேன். அது மட்டுமல்ல, சினிமாத் துறைக்கும் நான் நன்மை
செய்கிறேன். ஏனென்றால், சினிமாவை தியேட்டரில் வந்து
பார்க்கும்படி ரசிகர்களை தூண்ட வேண்டியது தயாரிப்பாளர்களின்
கடமைகளில் ஒன்றாகும். சினிமா துறையைச் சேர்ந்த ஒரு பெரிய
சமுதாயத்தின் வாழ்க்கையே அதில்தான் உள்ளது " என அவர் கூறினார்.
ஆக, அவரது துறையைச் சேர்ந்தவர்களின் நலன் மீது அவர் கொண்டுள்ள
அக்கறை எந்த ஒரு ஐயப்பாட்டிற்கும் இடமில்லாதது.
அவரது குழுவினர் 'ஷிப்டு'
முறையில் ஓய்வெடுத்துக் கொள்ளும்போது, அவர் மட்டும் எல்லா
நாட்களும் ஓய்வின்றி எவ்வாறு உழைக்கிறார் என்பது புரியாத
புதிராகத்தான் உள்ளது . பட வேலைகள் நடந்து கொண்டிருக்கும்
போது, அவரது தீவிர கவனம் மற்றும் ஈடுபாட்டிக்கு அப்பால், அவரது
ஆற்றல் என்பது அளவிடற்கரியதாக உள்ளது. வேலையில் அவரது
அர்ப்பணிப்பே அவரது வெற்றிக்கு முழுமுதற் காரணமாகும். " நான்
பல கடவுள்களை வணங்குகிறேன். ஆனால் ஒரே ஒரு கடவுளைத்தான்
நம்புகிறேன். அது எனது தொழில்தான். எனது தொழிலே எனது தெய்வம் "
என்று அவர் கூறினார். தொழிலே பிரர்த்தனையாகும்போது, நேர்த்தி
என்பது தன்னால் வருகிறது என அவர் நம்புகிறார். இதனை தனது
செயல்பாடுகளாலும், சாதனைகளாலும் அவர் பல முறை நிரூபித்துள்ளார்.
வளர்ந்து வரும் கலைனர்களுடன் இணைந்து பணியாற்றும்
நற்பண்புக்காக ஒரு செயல்வீரர் என அவர் புகழப்படுகிறார்.
இத்துடன் அவரது சிறப்புக்கள் நிறைவடைந்து விடவில்லை.
திட்டமிடுவதிலும், திட்டங்களை செயல்படுத்துவதிலும் அவர்
தேர்ந்தவர். கழுகுக், கண்களைப் பெற்றவராக வர்ணிக்கப்படும் அவரது
பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை. திரையுலகின்
சூட்சுமங்களை நன்கறிந்து, பணியாற்றும் தயாரிப்பாளராக
திகழ்கிறார்.
திரைப்பட விநியோகஸ்தராக வெற்றி
கண்ட பிறகு, நம்பிக்கை வளரப் பெற்ற அவர், பரீட்சார்த்தமாக,
மலையாளத்திலும், தமிழிலும் குறைந்த பொருட்செலவில் சில படங்களை
எடுத்தார். பின்னர் இடி முழக்கம் போன்று 'ஜென்டில்மேன்'
திரைப்படம் வந்தது. திரையுலகத்தையே ஒரு புயல் போல் கலக்கியது.
பணமழையும் கொட்டியது. படத்தின் வெற்றியை பார்த்து ரசிகர்களுடன்,
திரைப்படத் துறையும் சில காலம் மலைத்து நின்றது. அதைப் பற்றி
மக்கள் பேசுவதுடன் நிறுத்தவில்லை. அப்படத்தின் பாடல்களை
முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போதே, பிரபுதேவா முதல் முறையாக
கதாநாயகனாக நடித்த, 'காதலன்' படம் வெளிவந்தது. சிறந்த
பாடல்களுடன் வந்த அப்படம் சூப்பர்-டுப்பர் ஹிட் ஆனது. மெக்சிகோ
நாட்டின் கௌபாய் பட பாணியில் எடுக்கப்பட்ட ' முக்காலா
முக்காபலா' பாட்டு கற்பனைக்கெட்டாத வகையில் வரவேற்பை பெற்றது.
இந்த ஒரு அசாதாரண பாடல் காட்சிக்காக செலவிட்ட தொகையை கொண்டு,
வேறு சிலர் ஒரு படத்தையே எடுத்து முடித்திருப்பார்கள். இந்த
பாடல், இந்திய சினிமா உலக வரலாற்றில் முதன் முறையாக, டிஜிட்டல்
கம்ப்யூட்டர் தொழில் நுட்ப்பத்தில் உருவாக்கப்பட்டதாகும்.
தொழில்நுட்பரீதியில் புதுமையான படைப்பு என்று அனைவரும் ஒத்துக்
கொண்ட இந்தப் பாடல் ஒரு புதிய அத்தியாயத்தையே தொடங்கியது. நவீன
தொழில்நுட்பங்களை பயன்படுத்தியமைக்காக படக்குழுவினர் கே.டி.
குஞ்சுமோனை வானளாவப் புகழ்ந்தனர். ரசிகர்கள் அனைவரும்
அவர்களுக்கு முற்றிலும் பொருத்தமான வகையில், மிகச் சிறந்த
படைப்புகளையே பெற வேண்டும் என்பதில் கே.டி.குஞ்சுமோன் உறுதியாக
இருந்தார். அவரது படங்களில் அனிமேஷன், கிராபிக்ஸ், டால்பி
போன்ற இன்றைய நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தியதன் மூலம்
புதிய பாதை வகுத்தார்.
தோட்டாதரணியின் கைவண்ணத்தில்,
மகாபலிபுரம் ஜி.வி.கார்டனில் 72 ஏக்கர் நிலப்பரப்பில், இரண்டு
கோடி ரூபாய் செலவில் உருவான அரங்கம் ஒன்றில், 'காதல் தேசம்'
படம் எடுக்கப்பட்டது. இந்த அரங்கமே சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பு
மையமாக உருவெடுத்தது. படத்தின் பாடல்கள் மக்கள் மனதை வசியம்
செய்பவையாக இருந்தன. பெண்மையின் மகத்துவத்துக்கும், நட்பின்
மேன்மைக்கும் ஒரு புதிய விளக்கம் அளிப்பதாக அந்த படம்
அமைந்தது.
உலக அழகி சுச்மிதாசென்னை, தனது
'ரட்சகன்' படம் மூலம் ஒரு நடிகையாக இந்திய சினிமாவில் அறிமுகம்
செய்தவர் கே.டி.குஞ்சுமோன்தான். 1997-ஆம் ஆண்டில் மெகா
பட்ஜெட்டில் அந்த படம் உருவானது. அன்றைய காலகட்டத்தில், இந்திய
திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய முதலீட்டில் எடுக்கப்பட்ட
முதல் திரைப்படம் என்ற பெருமையை அது பெற்றது. இந்திய
திரையுலகில், அது ஒரு புதிய சகாப்தத்தை, அதாவது குஞ்சுமோன்
சகாப்தத்தை தொடங்கி வைத்தது. அவரது திரைப்படங்கள் பெற்ற
மாபெரும் வெற்றி மற்ற தயாரிப்பாளர்களுக்கு ஆக்கமும் ,ஊக்கமும்
அளிப்பதாக இருந்தது.
அவரது ஒவொவொரு படமும் மற்ற
தயாரிப்பாளர்களுக்கு படிப்பினை அளிப்பதாகவும் அமைந்தது.
திரைப்படத் தயாரிப்பின் இலக்கணத்தை கற்றுக் கொடுக்கும் வகையில்
அவரது படங்கள் அமைந்திருந்தன. இதனால் தயாரிப்பாளர்கள் மெகா
பட்ஜெட்டில் படங்களை எடுப்பதற்கான துணிவும் நம்பிக்கையும் வரப்
பெற்றனர்.
அவரது திரைப்படங்களின் பிரமாண்ட
வெற்றி குறித்து அவரது உணர்வுகள் எவ்வாறு உள்ளன என்று கேட்டால்,
"எனது படங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியால் நான்
சம்பாதித்த பணத்தை காட்டிலும், இயக்குனர் சங்கர், இசையமைப்பாளர்
ஏ.ஆர் .ரகுமான், நடிகர்கள் விஜய், சரத்குமார்,
இயக்குனர்-நடிகர் பிரபுதேவா, அர்ஜுன் போன்றோருக்கு எனது படங்கள்
மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தன என்பதே
பெருமையளிக்கிறது. இவர்கள் அனைவரும் அவரவர் துறையில் இன்று
ஜாம்பவான்களாக உள்ளனர். இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான்
எப்போதுமே மிகவும் விரும்புகிறேன்" என்கிறார்.
அவரது வெற்றிக்கு பின்புலமாக
அமைந்தவர்கள் குறித்து கூறும் போது அவரது மனைவியே தனது
அன்பாலும் ஆதரவாலும் அவருக்கு ஊக்கமளித்ததாக கூறினார். "என்
மனைவி இறைவன் எனக்கு அளித்த பரிசு" என்றும் அவர்
நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.
படங்களை தயாரிப்பதில் அவர் சோதனை
முயற்சிகள் பல செய்தவர். அதே சமயம் அவரது படபிடிப்பு
குழுவினரின் நலனில் அதிக அக்கறை கொண்டவராகவும் விளங்கினார்.
அவரது இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் இதர
பணியாளர்களுக்கு வீடுகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும்
தங்க மோதிரங்களை பரிசாக அளித்து அவர்களை கௌரவபடுத்தினார்.
ரசிகப் பெருமக்களுக்கு அவர் அளித்த வெகுமதிகள் குறித்து
சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
வாழ்வில் மறக்க முடியாத தருணங்கள்
குறித்து கேட்டபோது, 'மருதநாயகம் ' திரைப்படத் துவக்க விழாவின்
போது, உலக நாயகன் கமல்ஹாசன் அவரை இங்கிலாந்து ராணி எலிசபெத்
அவர்களிடம், "இவர் திரு.குஞ்சுமோன்... முன்னணி திரைப்படத்
தயாரிப்பாளர்" என்று அறிமுகம் செய்து வைத்ததையும்,
அமெரிக்காவின் முன்னாள் உதவி ஜனாதிபதியும், உலக அமைதிக்காக
நோபல் பரிசு பெற்றவருமான அல்கோர் அண்மையில் சென்னைக்கு வந்த
போது டாக்டர். செரியன் அறிமுகபடுத்தி வைத்ததையும் நினைவு
கூறுகிறார்.
நண்பர்களுக்கு உதவி செய்வதற்காக
அவர் எந்த எல்லைக்கும் செல்லவார். அது மட்டுமல்ல, வாழ்வின்
ஒவ்வொரு அடியிலும் தனது முன்னேற்றத்திற்கு உதவிய நண்பர்களை
என்றென்றும் நினைவில் வைத்து போற்றும் 'ஜென்டில்மேன்' ஆவர்.
இன்பத்திலும், துன்பத்திலும் தன்னோடு நிலையாக இருந்தவர்களை அவர்
எந்நாளும் மறப்பதில்லை. அவர்களை தன் மனதில் வைத்து என்றென்றும்
பூஜிக்கிறார் . அவர்களுக்கு துன்பம் நேரும்போதெல்லாம் அவர்களை
கேட்காமலேயே ஓடிச் சென்று உதவுவது அவரது வழக்கம். எனவே அவரை பன்
மனம் கொண்டவர் என நண்பர்கள் புகழ்வதில் வியப்பேதுமில்லை.
மகத்தான வெற்றிகளைப் பெற்று சாதனை
படைத்தது வரும் வேளையிலும், அவர் எளிமையாகவும் அமைதியாகவும்
இருப்பார். அவரை பார்க்க விரும்வோர் அனைவருமே எளிதில் சந்திக்க
கூடிய வகையில் ஆடம்பரமில்லாத மனிதராக திகழ்கிறார்.
பழைய பாதையில் பயணம் செய்ய அவர்
என்றுமே விரும்புவதில்லை. தனக்கென ஒரு பரட்சிப் பாதையை வகுத்து
அதில் வெற்றி நடை போடுபவர். ரசிகர்கள் தனது படங்களில் விசேச
காட்சிகளையும், அசாதாரணமான அம்சங்களையும் எதிர்ப்பதாக அவர்
கூறுவது வழக்கம். எனவே அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மேல்
அதிக சிறப்பம்சங்களை தன்னுடைய படங்களில் சேர்ப்பது அவரது
வாடிக்கையாகும்.
அதே சமயம் அவர் தனது முந்தைய
வெற்றிகளை மட்டும் அசை போட்டுக் கொண்டு திருப்தி அடைந்து
விடும் சாதாரண மனிதரில்லை. ஒரு நாள் ஹாலிவுட் சென்று படம்
தயாரிக்க வேண்டும் என்பதே அவருடைய வண்ணக் கனவாகும்.
மேற்கண்ட நிறுவனங்களின் திரைப்படங்களை தமிழகத்தின் சென்னை, வட
ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு மற்றும் கோவை ஆகிய
இடங்களில் விநியோகிப்பதர்க்கான உரிமைகளை அவர் பெற்றிருந்தார்.
கமல்ஹாசனின் 'நாயகன்' திரைப்படத்தின் விநியோகஸ்தர் என்ற
முறையில் தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவிற்கு அவர்
அழைக்கப்பட்டார். அங்கு நாயகன் படம் திரையிடப்பட்டது.